சசிகலா புஷ்பா திருமணத்திற்கு தடை!

மார்ச் 24, 2018 609

மதுரை (24 மார்ச் 2018) : சசிகலா புஷ்பா எம்பி, ராமசாமி என்பவருடன் செய்ய இருக்கும் இரண்டாவது திருமணத்திற்கு , மதுரை குடும்ப நல நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தான எம்பி சசிகலா புஷ்பா , ராமசாமி என்பவரை மறுமணம் செய்ய தீர்மானித்துள்ளதாக திருமண பத்திரிகையுடன் சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. இதையடுத்து ராமசாமி தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாக மாவட்ட ஆட்சியரிடம் அவரது மனைவி சத்யபிரியா புகார் அளித்தார்.

இதைத் தொடர்ந்து மதுரை குடும்ப நல நீதிமன்றத்திலும் சத்யபிரியா வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், சத்யபிரியா- ராமசாமி விவகாரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது; முதல் திருமணத்தை ரத்து செய்யாமல் ராமசாமி 2வது திருமணம் செய்யக்கூடாது என்று மதுரை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...