வங்கி மோசடியில் ஈடுபட்ட அடுத்த நகை நிறுவனம்!

மார்ச் 24, 2018 627

சென்னை (24 மார்ச் 2018): கானிஷ்க் நகை நிறுவனத்தை தொடர்ந்து நாதெல்லா நகை நிறுவனமும் வங்கி மோசடியில் ஈடுபட்டது அம்பலம் ஆகியுள்ளது.

ஸ்டேட் வங்கி சார்பில் சிபிஐ க்கு அளிக்கப் பட்டுள்ள புகாரில், சென்னையை சேர்ந்த நாதெல்லா சம்பத் ஜுவல்லரி பி., லிமிடெட் என்ற நிறுவனம், போலி ஆவணங்கள், போலி கணக்குகளை காண்பித்து, 250 கோடி ரூபாய் கடன் பெற்று, மோசடியில் ஈடுபட்டுள்ளதாக, தெரிவித்துள்ளது.

கனிஷ்க் நகை நிறுவனத்தின் ரூ. 824 கோடி மோசடி அம்பலமான சில நாட்களில் தற்போது நாதெல்லா நிறுவனம் முறைகேடாக ரூ.250 கோடி கடன் பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...