சென்னை பிரபல நகை நிறுவனத்தின் மீது சிபிஐ வழக்கு பதிவு!

மார்ச் 25, 2018 462

சென்னை (25 மார்ச் 2018): சென்னை பிரபல நகை நிறுவனமான நாதெல்லா நகை நிறுவனத்தின் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

ஸ்டேட் வங்கி சார்பில் சிபிஐ க்கு அளிக்கப் பட்டுள்ள புகாரில், சென்னையை சேர்ந்த நாதெள்ளா சம்பத் ஜுவல்லரி பி., லிமிடெட் என்ற நிறுவனம், போலி ஆவணங்கள், போலி கணக்குகளை காண்பித்து, 250 கோடி ரூபாய் கடன் பெற்று, மோசடியில் ஈடுபட்டுள்ளதாக, தெரிவித்துள்ளது. இதனை அடுத்து நாதெல்லா நகை நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.

மேலும் இதுவல்லாமல் எஸ்.பி.ஐ. யூனியன் பேங்க் ஆப் இந்தியா, ஹெச். டி.எஃப்.சி. வங்கிகளிடம் இருந்து கடன் பெற்று வட்டியுடன் ரூ.379 கோடி வரை நாதெள்ளா நிறுவனம் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. 

கனிஷ்க் நகை நிறுவனத்தின் ரூ. 824 கோடி மோசடி அம்பலமான சில நாட்களில் தற்போது நாதெல்லா நிறுவனம் முறைகேடாக ரூ.250 கோடி கடன் பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...