முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சென்னை விமான நிலையத்தில் டீ குடிக்கலாம் என அங்குள்ள ஒரு டீ ஷாப்பில் ஆர்டர் செய்துவிட்டு விலையை கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் 135 ரூபாய் கேட்டுள்ளனர். இதனால் அதிர்ந்து போன ப.சிதம்பரம் ஆர்டர் செய்த டீயை வேண்டாம் என நிராகரித்துள்ளார்.
இதுகுறித்து ஆதங்கத்துடன் அவரது ட்விட்டர் பக்கத்தில் ப.சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.