நீட் தேர்வை ரத்து செய்ய ஜனாதிபதி ஒப்புதல் அளிக்க வேண்டும்: திமுக மாநாட்டில் தீமானம்!

மார்ச் 25, 2018 453

ஈரோடு (26 மார்ச் 2018): ஈரோட்டில் திமுக மண்டல மாநாடு கடந்த இரண்டு நாட்களாக நடை பெற்று வருகிறது.

மாநாட்டின் 2வது நாளான இன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தீர்மானங்களை திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வாசித்தார்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

- லோக்பால் அமைப்பை அமைக்காமல் இழுத்தடிக்கும் மத்திய அரசுக்கு கண்டனம்

- பெரியார் சிலை உடைக்கப்பட்டதற்கு கண்டனம்

- மாநில உரிமைகளை மீட்டு பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

- நீட் தேர்வை ரத்து செய்யும் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி தீர்மானம்

- ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் என்ற நோக்குடன் செயல்படும் மத்திய அரசுக்கு கண்டனம்

- ஜனநாயக அமைப்புக்கு விரோதமாக மத்திய பாஜக அரசு செயல்படுவதற்கு கண்டனம்

- பச்சைத்தேயிலைக்கு உரிய விலை வழங்க வேண்டும்

- கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் டன் ஒன்றுக்கு ரூ.2,500 வழங்க வேண்டும்

- சிறு, குறு விவசாயிகளின் கடன்கள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும்

- சேலம் உருக்காலையை தனியார்மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும்

- கெயில் திட்டத்தால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பை உடனே தடுக்க வேண்டும்

- கைத்தறி துணிகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்

- பேருந்து கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும்

- திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட தமிழக நதிகள் இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும்

- உள்ளாட்சி அமைப்புகளின் வரி உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும்

- டெல்டா பகுதிகளை பெட்ரோகெமிக்கல் மண்டலமாக மாற்றும் திட்டத்திற்கு கண்டனம்

- ஜிஎஸ்டியில் மத்திய அரசு தேவையான மாற்றங்களை செய்ய வேண்டும்

மேற்கண்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப் பட்டன. 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...