வங்கிகள் விடுமுறை குறித்து பரவும் தகவல் தவறானது: வங்கி அதிகாரிகள்!

மார்ச் 26, 2018 1162

சென்னை (26 மார்ச் 2018): வங்கிகள் தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை என வாட்ஸ் அப்பில் பரவும் தகவல் தவறானது என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரண்டு தினங்களாக ‘வாட்ஸ்-அப்’பில் வங்கி விடுமுறை குறித்து ஒரு தகவல் வைரலாகப் பரவி வருகிறது.

அதில், வரும் 29-ம் தேதி வியாழக்கிழமை மகாவீர் ஜெயந்தி, 30-ம் தேதி வௌ்ளிக்கிழமை புனிதவெள்ளி, 31-ம் தேதி சனிக்கிழமை மற்றும் ஏப்.1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, ஏப்.2-ம் தேதி திங்கட்கிழமை ஆண்டு கணக்கு முடிப்பு தினம் என தொடர்ந்து 5 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது. எனவே, அதற்கேற்றவாறு தங்களுடைய வங்கிப் பணப் பரிவர்த்தனைகளை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸப்பில் பரவும் இத்தகைய தகவல் தவறானவை என வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் 29-ம் தேதி வியாழக்கிழமை மகாவீர் ஜெயந்தி, 30-ம் தேதி வௌ்ளிக்கிழமை புனிதவெள்ளி விடுமுறை என்பது சரியானதுதான். ஆனால் 31 ஆம் தேதி சனிக்கிழமை வழக்கம்போல் வேலை நாளாகும் அன்று பண பரிவர்த்தனைகள் செய்து கொள்ளலாம். ஏப்.1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வழக்கமான விடுமுறை நாள். ஏப்.2-ம் தேதி வங்கிகளின் ஆண்டு கணக்கு முடிக்கும் தினம். எனவே அன்றைய தினம் வங்கிகள் செயல்படும். எனினும் அன்று பணப் பரிவர்த்தனைகள் எதுவும் நடக்காது என்றனர்.

இதன்மூலம், ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை என்ற வதந்திக்கு முற்றுப் புள்ளி வைக்கப் பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...