அன்வர் ராஜா எம்.பி மகன் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு!

மார்ச் 26, 2018 702

காரைக்குடி (26 மார்ச் 2018): அன்வர் ராஜா மகன் நாசர் அலி மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.

இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா மகன் நாசர் அலி. இவர் மீது சென்னை தனியார் வானொலி தொகுப்பாளர் ரொபினா மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்திருந்தார்.

அதில் அவரை நாசர் அலி திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி விட்டதாகவும் சுமார் ரூ 50 லட்சம் பணம் பெற்றுள்ளதாகவும் இந்நிலையில் வேறொரு பெண்ணுடன் திருமணம் நடக்க உள்ளதாக தகவல் அறிந்தேன். எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்திருந்தார். இதனை அடுத்து நாசர் அலி மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே காரைக்குடியில் நாசர் அலிக்கு திருமணம் நடக்க இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து ரொபினா அங்கும் சென்றுள்ளார். ஜமாத்தார் முன்னிலையில் கண்ணீர் விட்டு கதறியுள்ளார். இதனால் ஜமாத் நாசர் அலிக்கு நடத்தி வைக்க இருந்த திருமணத்தை நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...