மத உணர்வை புண்படுத்தும் சர்ச்சை கருத்து தெரிவித்த இளையராஜா!

மார்ச் 26, 2018 697

சென்னை (26 மார்ச் 2018): கிறிஸ்தவ மதம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்து சிக்கிக் கொண்டுள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா.

இயேசு உயிர்தெழுந்த ஈஸ்டர் திருநாள் நெருங்கிக் கொண்டிருக்கிற வேளையில், கிறிஸ்தவர்களின் அடித்தளமான மத நம்பிக்கையான உயிர்த்தெழுதல் குறித்தும், அது நடக்கவில்லை என்று இளையராஜா பேசியுள்ளார். இது கிறிஸ்தவர்கள் மனதை புண்படுத்தியதாக கூறப் படுகிறது.

இந்நிலையில் இன்று அவரது வீட்டை சிறுபான்மை மக்கள் நலக் கட்சியினர் சிலர் முற்றுகையிட முயற்சி செய்தனர்.

ஆனால் இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் உடனடியாக விரைந்து வந்த காவல்துறையினர் இளையராஜா வீட்டை முற்றுகையிட முயன்ற சிறுபான்மை மக்கள் நலக்கட்சியினர்களை கைது செய்தனர். இதனால் இளையராஜா வீடு அருகே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...