தடையை மீறி சசிகலா புஷ்பா இரண்டாவது திருமணம் நடந்தது!

மார்ச் 26, 2018 648

புதுடெல்லி (26 மார்ச் 2018): நீதிமன்ற தடையையும் மீறி சசிகலா புஷ்பா ராமசாமி திருமணம் நடந்து முடிந்தது.

மாநிலங்களவை அ.தி.மு.க. எம்.பி. சசிகலா புஷ்பாவும், ராமசாமி என்பவரும் இரண்டாவது திருமணம் செய்து கொள்வதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இதுபற்றி தகவல் அறிந்த ராமசாமியின் முதல் மனைவி சத்யபிரியா மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் குடும்ப நல நீதிமன்றம், ராமசாமி வேறு பெண்ணை திருமணம் செய்ய தடை விதித்தது.

இந்நிலையில் சசிகலா புஷ்பாவுக்கும், ராமசாமிக்கும் டெல்லியில் இன்று திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பங்கேற்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...