தமிழகத்தில் நியூட்ரினோ திட்டத்தை செயல் படுத்த மத்திய அரசு ஒப்புதல்!

மார்ச் 26, 2018 572

புதுடெல்லி (26 மார்ச் 2018): தமிழகத்தில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

தேனி மாவட்டம், தேவாரம் அருகே பொட்டிப்புரம் கிராமத்தில் உள்ள அம்பரப்பர் மலையில் சுமார் ரூ.1,500 கோடி செலவில் நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது. அம்பரப்பர் மலையைக் குடைந்து நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தினால் தேனி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்றும், மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்றும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

எனினும் எதிர்ப்பையும் மீறி நியூட்ரினோ திட்டத்துக்கு மத்திய மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனத்திற்கு மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

மேலும் நியூட்ரினோ திட்ட நிர்வாகம் தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்து அனுமதி பெற வேண்டும் என்றும், ஆட்சேபனை இருப்பின் 30 நாட்களுக்குள் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...