மத்திய அரசுக்கு எதிரான நான்கு கட்சிகளின் நம்பிக்கை இல்லா தீர்மான நோட்டீஸால் பரபரப்பு!

மார்ச் 27, 2018 554

புதுடெல்லி (27 மார்ச் 2018): மத்திய அரசுக்கு எதிரான நான்கு கட்சிகளின் நம்பிக்கை இல்லா தீர்மான நோட்டிஸால் இன்று மக்களவை பரபரப்பாக காணப் படும் என எதிர் பார்க்கப் படுகிறது.

மத்திய அரசில் அங்கம் வகித்த தெலுங்கு தேச கட்சி ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து மற்றும் நிதி தொகுப்பு வழங்காததை கண்டித்து கூட்டணியில் இருந்து வெளியேறியது. இதையடுத்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர அக்கட்சி மக்களவை சபாநாயகரிடம் நோட்டீஸ் அளித்தது. இதற்கிடையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர கடந்த வாரம் நோட்டீஸ் அளித்தது.

இதனிடையே கடந்த வாரம் இறுதியில் காங்கிரஸ் கட்சியும் இது தொடர்பாக நோட்டீஸ் அளித்துள்ள நிலையில் 4-வது கட்சியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் திங்களன்று மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர அவைத்தலைவர் சுமித்ரா மகாஜனிடம் நோட்டீஸ் அளித்திருக்கிறது.

இந்த நோட்டீஸ் விவாதத்திற்கு இன்று எடுத்துக் கொள்ளப்படலாம் என தெரிகிறது. மக்களவைக்கு இன்று காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் வரவேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனால் இன்று மக்களவை பரபரப்பாக காணப்படும் என எதிர் பார்க்கப் படுகிறது.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...