மத்திய அரசு மீது வழக்கு தொடர தமிழக அரசு முடிவு!

மார்ச் 27, 2018 554

சென்னை (27 மார்ச் 2018): மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகம் - கர்நாடகம் இடையேயான காவிரி பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கடந்த மாதம் 16-ம் தேதி இறுதித் தீர்ப்பை வழங்கியது உச்ச நீதிமன்றம். அதில், ``காவிரி நீர் யாருக்கும் உரிமை இல்லை. தமிழகத்தின் நீண்ட நாள் கோரிக்கையான 6 வார காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் உள்ளிட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன". இதனையடுத்து நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்திலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் அதனை பிரதமரிடம் கொடுப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. ஆனால், அதற்கு பிரதமர் அலுவலகம் மறுப்பு தெரிவித்துவிட்டது. இந்நிலையில், உச்ச நீதிமன்றம் விதித்த 6 வார காலக்கெடு நாளை மறுநாளுடன் முடிவடைகிறது.

அந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. எனினும் எதிர்க்கட்சிகளும், ஆளும் கட்சியும் இதுதொடர்பாக தங்களது போராட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில், மேலாண்மை வாரியத்துக்கு பதிலாக, 9 பேர் கொண்ட குழு ஒன்றை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 29-ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...