நடிகர் பிரசாந்தின் முன்னாள் மனைவி வீட்டில் நகை கொள்ளை!

மார்ச் 28, 2018 953

சென்னை (28 மார்ச் 2018): நடிகர் பிரசாந்தின் முன்னாள் மனைவி கிரகலட்சுமி வீட்டில் 170 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

நடிகர் பிரசாந்த் முன்னாள் மனைவி கிரகலட்சுமி வீட்டில் 170 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சென்னை மாம்பலத்தில் உள்ள அவரது வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

நடிகர் பிரசாந்துக்கு கடந்த 2005 ஆம் ஆண்டு கிரகலட்சுமியுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். ஆனால் கிரகலட்சுமி ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதை மறைத்து பிரசாந்தை திருமணம் செய்ததாகக் கூறி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...