தற்கொலை செய்து கொள்வோம் - அதிமுக எம்பி பரபரப்பு பேச்சு!

மார்ச் 28, 2018 492

புதுடெல்லி (28 மார்ச் 2018): காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கா விட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்று அதிமுக எம்.பி நவநீத கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி அதிமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தொடர்ந்து 17 நாட்களாக அமளியில் ஈடுபட்டு முடக்கி வந்தனர். இதனால் ஏப்ரல் 2-ம் தேதி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காவிரி விவகாரம் தொடர்பாக நாளை காலை 10 மணிக்கு முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே நாடாளு மன்றத்தில் பேசிய அதிமுக எம்.பி நவநீத கிருஷ்ணன், உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாவிடில் அரசியல் சட்டத்தால் என்ன பயன். காவிரி விவகாரத்தில் மத்திய அரசு அமைதியாக இருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்காவிட்டால் அதிமுக எம்.பி.க்கள் அனைவரும் தற்கொலை செய்து கொள்வோம் என மாநிலங்களைவையில் நவநீதகிருஷ்ணன் ஆவேசமாக பேசியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...