தற்கொலை செய்ய வேண்டாம் ராஜினாமா செய்வார்களா? :தமிழிசை கேள்வி!

மார்ச் 28, 2018 594

சென்னை (28 மார்ச் 2018): அதிமுக எம்.எல்.ஏக்கள் முதலில் ராஜினாமா செய்ய தயாரா? அதை விடுத்து தற்கொலை செய்யப் போவதாக மிரட்டுகிறார்கள் என்று தமிழிசை சவுந்திரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் அதிமுக எம்பிகள் கூண்டோடு தற்கொலை செய்வோம் என்று நவநீதிகிருஷ்ணன் எம்பி இன்று நாடாளு மன்றத்தில் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதிமுக எம்பியின் பேச்சை கிண்டலடித்துள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திர ராஜன், அதிமுக எம்.பிக்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று சொன்னாலே ஒருவர் கூட வரமாட்டார்கள், தற்கொலை செய்து கொள்ள வருவார்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...