அதிமுக எம்.பிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த கனிமொழி!

மார்ச் 29, 2018 678

சென்னை (29 மார்ச் 2018): அதிமுக எம்.பி நவநீத கிருஷ்ணன் கருத்து உணர்ச்சி பூர்வமானது என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:

நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி. நவநீத கிருஷ்ணன் பேசியபோது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வோம் என்று தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுபற்றி கனிமொழியிடம் கேட்டபோது, ‘அவர் உணர்வுப்பூர்வமாக கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். அதைப்பற்றி விமர்சனம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

கர்நாடகத்தில் நடக்கும் தேர்தலுக்காகத்தான் தமிழக அரசாங்கத்தையும் தமிழக விவசாயிகளையும் மத்திய அரசு வஞ்சித்துக் கொண்டிருக்கிறது. வரும் 30-ம் தேதி தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின், செயற்குழுவை கூட்டியிருக்கிறார். அதில் திமுக மேற்கொண்டு என்ன நடவடிக்கை மேற்கொள்ளும் என்பது பற்றி பேசி முடிவு எடுக்கப்படும்." என்றார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...