டெல்லியில் தமிழக விவசாயிகள் கைது!

மார்ச் 29, 2018 480

புதுடெல்லி (29 மார்ச் 2018): டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் கைது செய்யப் பட்டுள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் விதித்த கெடு இன்றுடன் முடிவடைந்த நிலையில் மத்திய அரசு இதுகுறித்து எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை.

இந்நிலையில் டெல்லியில் கடந்த நான்கு நாட்களாகப் போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகள் இன்று நாடாளுமன்ற சாலையில் ஊர்வலமாகச் செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டனர்.

ஏற்கனவே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி தஞ்சாவூரில் காவிரி உரிமை மீட்புக் குழுவின் சார்பில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் உடனடியாகக் கைதுசெய்யப்பட்டனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கடையத்தில், செல்போன் கோபுரத்தில் ஏறிய 14 பேர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தினர். இதேபோல, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நாகல் புதூரிலும் சிலர் செல்போன் கோபுரம் ஒன்றில் ஏறி போராட்டம் நடத்தினர். இவர்கள் அனைவருமே கைதுசெய்யப்பட்டனர்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...