மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு வழக்கு தொடர முடிவு?

மார்ச் 29, 2018 515

சென்னை (29 மார்ச் 2018): மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக முடிவவேதும் எடுக்காத நிலையில், மத்திய அரசை எதிர்த்து தமிழக அரசு வழக்கு தொடர முடிவெடுத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்சநீதிமன்றம் விதித்திருந்த 6 வார காலக்கெடு இன்றுடன் நிறைவடைந்தது. ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் அவசரமாக இன்று ஆலோசனை நடத்தினார்கள். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முறையிட தமிழக அரசு முடிவுசெய்திருப்பதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...