கருணாநிதியை சந்திக்கிறார் மமதா பானர்ஜி!

மார்ச் 29, 2018 551

சென்னை (29 மார்ச் 2018): திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி சென்னை வருகிறார்.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராக வலுவான கூட்டணியை உருவாக்க மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தீவிரமாக செயல்பட்டு வருகிறார். 3வது அணிக்கு விருப்பம் தெரிவித்த தெலுங்கானா முதல்வர் சந்திசேகர ராவை அண்மையில் மமதா சந்தித்தார். இதே போன்று பாஜகவுக்கு எதிரான அனைத்துக் கட்சித் தலைவர்களையும் மமதா சந்தித்து வருகிறார்.

இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க விரும்புவதாக அண்மையில் ராஜ்யசபா எம்பி கனிமொழியிடம் மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் ஏப்ரல் 11 அல்லது 12ல் சென்னை கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியை மமதா சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...