வங்கிகள் இன்று இரவு 8 மணி வரை இயங்கும்!

மார்ச் 31, 2018 582

புதுடெல்லி (31 மார்ச் 2018): வங்கிகள் இன்று இரவு 8 மணி வரை இயங்கும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

நடப்பு நிதியாண்டு (2017-18) இன்றுடன் நிறைவடைகிறது. நிதியாண்டு 2016-17, 2017-18 ஆகியவற்றுக்கான வருமானவரி ரிட்டன்கள், 2016-17-ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட ரிட்டன்கள் ஆகியவற்றை தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். இன்று மாலைக்குள் வரி செலுத்துவோர் வருமான வரி ரிட்டன்களை தாக்கல் செய்ய வேண்டும். இதற்காக வருமான வரி அலுவலகங்களில் சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.

மார்ச் 29, 30-ம் தேதி மகாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி காரணமாக அரசு விடுமுறையாக இருந்தாலும், வருமான வரி அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்படவில்லை. நிதி ஆண்டின் கடைசி வேலைநாளான இன்றும் வருமானவரி அலுவலகங்கள் செயல்படுகின்றன

இந்நிலையில், வருமான வரி செலுத்துவோரின் வசதிக்காக, இன்று அனைத்து வங்கிகளும் இரவு 8 மணி வரை செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதுதவிர வழக்கமான வணிக நேரத்திற்கு பிறகும், இன்று நள்ளிரவு வரை மின்னணு பரிமாற்றங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...