நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக தொண்டர் தீ குளிப்பு!

மார்ச் 31, 2018 781

மதுரை (31 மார்ச் 2018): நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக தொண்டர் தீ குளித்த விவகரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று நடைபயணம் மேற்கொண்டுள்ளார். இதற்கான நிகழ்ச்சி மதுரை பழங்காநத்தத்தில் நடைபெற்றது.

இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தொண்டர்கள் மத்தியில் மேடையில் உரையாற்றினார். அப்போது யாரும் எதிர்பாரத வகையில் தொண்டர் ஒருவர் திடீரென தீக்குளித்தார். அவர் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தீ வைத்தபடி மேடையை நோக்கி ஓடி வந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ரை சக தொண்டர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீக்குளித்த தொண்டர் சிவகாசியைச் சேர்ந்த ரவி என தெரியவந்துள்ளது. தீக்குளித்த அந்த தொண்டருக்கு மதுரை அப்பல்லோவில் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்படுகிறது. இதற்கிடையே இந்த சம்பவத்தை நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்த வை.கோ மேடையில் கதறி அழுதார்.

முன்னதாக நிகழ்ச்சியை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...