அதிமுக எம்.பி முத்துக்கருப்பன் ராஜினாமா?

ஏப்ரல் 02, 2018 560

சென்னை (02 ஏப் 2018): காவிரி நீர் விவகாரத்தில் மத்திய அரசின் மெத்தனப் போக்கை கண்டித்து அதிமுக எம்.பி முத்துக்கருப்பன் ராஜினாமா செய்யப் போவதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முத்துக்கருப்பன் எம்.பி. இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, " கடும் முயற்சிக்குப் பிறகு தீர்ப்பு கிடைத்த பிறகும் மத்திய அரசு காவிரி நீரை வழங்க தாமதப்படுத்துகின்றனர். தமிழகத்துக்கு தண்ணீர் கொடுப்பதில் செய்யப்படும் அநீதியை மனம் ஏற்கவில்லை. இதனால் ராஜினாமா செய்ய உள்ளேன். என் ராஜினாமா கடிதத்தை மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவிடம் அளிக்க உள்ளேன்." என்றார்.

மேலும், என் ராஜினாமாவுக்கு எதிராக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் என்னை சமாதானம் செய்ய நினைப்பார்கள் என்பதால் செல்போனை அணைத்து வைத்து விட்டேன். என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...