அதிமுக எம்.பி முத்துக் கருப்பன் திடீர் பல்டி!

ஏப்ரல் 02, 2018 534

சென்னை (02 ஏப் 2018): அதிமுக எம்.பி முத்துக் கருப்பன் ராஜினாமா செய்வதை மறு பரிசீலனை செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்திற்கு மத்திய அரசு துரோகம் செய்வதாகக் கூறி அதிமுக எம்.பி முத்துக் கருப்பன் ராஜினாமா செய்யப் போவதாக இன்று அதிரடியாக அறிவித்தார்.

அதன்படி துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடுவிடம் விடம் காலை 10.45 மணிக்கு, அளிக்கப்போகிறேன் என கூறினார். அதன்படி இன்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவிடம் ராஜினாமா கடிதத்தை அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.

இதற்கிடையே அவரது நண்பர்கள் பலரும் ராஜினாமா செய்ய வேண்டாம் என வலியுறுத்தியதால் ராஜினாமாவை மறு பரிசீலனை செய்வதாக தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...