சிறுமி வன்புணர்ந்து கொலை? - போலீஸ் விசாரணை!

ஏப்ரல் 03, 2018 582

கடலூர் (03 ஏப் 2018): கடலூர் அருகே சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப் பட்டதை அடுத்து அவர் வன்புணர்ந்து கொலை செய்யப் பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த பரலூரைச் சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த 1-ம் தேதி காணாமல் போனார். இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப் பட்டது. வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் காணாமல் போன சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். அவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...