குரங்கணி தீ விபத்தில் காயம் அடைந்த மேலும் ஒருவர் பலி!

ஏப்ரல் 03, 2018 499

மதுரை (03 ஏப் 2018): குரங்கணி தீ விபத்தில் காயம் அடைந்த சிவசங்கரி (26) என்பவரும் பலியானார்.

தேனி மாவட்டம் போடியை அடுத்த குரங்கணி காட்டுப்பகுதியில் கடந்த 11-ந் தேதி தீப்பிடித்தது. இதில் மலையேற்ற பயிற்சிக்கு சென்ற 36 பேர் சிக்கிக் கொண்டனர். இவர்களில் பலர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

9 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். தீக்காயம் அடைந்தவர்கள், மதுரை, கோவை, சென்னை மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் 12 பேர் அடுத்தடுத்து இறந்து போனார்கள்.

இந்த நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சிவசங்கரி (வயது 26) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன்மூலம் குரங்கணி தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்து உள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...