நிறைய தின் பண்டங்களுடன் அதிமுகவினர் உண்ணா விரதம்!

ஏப்ரல் 03, 2018 627

சென்னை (03 ஏப் 2018): நிறைய தின் பண்டங்களுடன் அதிமுக வினர் நடத்திய உண்ணா விரத போரட்டம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து அதிமுக அரசு உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறது. இந்த உண்ணா விரதத்தில் அதிமுகவினர் நொறுக்குத் தீனிகளை சாப்பிட்டு வருகிறார்கள். கடலைமிட்டாய், சிப்ஸ், சாக்லேட், சமோசா, வடை என நிறைய தின்பண்டங்கள் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் சாப்பிடுவதை சமூக வலைதளத்தில் பலர் கலாய்த்து வருகிறார்கள்.

அதுமட்டும் அல்லாமல் ஆடல் பாடல் குத்து டான்ஸ் எனவும் உண்ணா விரதம களை கட்டியுள்ளது. இதனை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...