திமுக முன்னாள் அமைச்சர் மரணம்!

ஏப்ரல் 04, 2018 623

சிவகங்கை (04 ஏப் 2018): திமுக முன்னாள் அமைச்சர் செ.மாதவன் உடல் நலக்குறைவால் காலமானார்.

84 வயதான் செ.மாதவன், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியைச் சேர்ந்தவர் செ.மாதவன். சிவகங்கையில் நீண்ட காலமாக வழக்கறிஞராக இருந்தார். பேச்சாற்றல், எழுத்தாற்றல் என பன்முகத் திறமையுடையவர். 1971-ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி அமைச்சரவையில் சட்டம், உணவு கூட்டுறவு, தொழில் துறை அமைச்சராக இருந்தார். பின்னர் 1984-ல் அதிமுகவில் இணைந்து எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார். 1989-ல் அதிமுக மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஜானகி அணி, ஜெயலலிதா அணி என பிரிந்தபோது இவர் ஜானகி அணியில் அதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பின்பு மீண்டும் 1996-ல் திமுகவில் இணைந்தார்.

இந்நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக நேற்று சிங்கம்புணரியில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். இவருக்கு மனைவியும், ஒரு மகன், 2 மகள்களும் உள்ளனர். இவர் காமராஜர், பக்தவத்சலம் ஆகியோர் முதல்வராக இருந்தபோது இவர் பேரவை உறுப்பினராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...