கார் லாரி நேருக்கு நேர் மோதியதில் ஏழு பேர் பலி!

ஏப்ரல் 07, 2018 545

ராஜபாளையம் (07 ஏப் 2018): ராஜபாளையம் அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானதில் ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ராஜபாளையம் அருகே சர்க்கரை ஏற்றி வந்த லாரியும் காரும் நேருக்கு நேர் மோதின. இந்த கோர விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் காரில் இருந்த 7 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். முதற்கட்ட விசாரணையில் விபத்தில் பலியானவர்கள் அனைவரும் கர்நாடக மாநிலத்தைச்சேர்ந்தவர்கள் எனவும், கேரளாவில் சுற்றுப்பயணம் செய்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பிய போது, விபத்து நேரிட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

மேலும் காயம் அடைந்த இரண்டு பேர் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...