அமைச்சர் நிலோபர் கபீல் மருமகன் மீது வாலிபர்கள் தாக்குதல்!

April 07, 2018

வாணியம்பாடி (07 ஏப் 2018): அமைச்சர் நிலோபர் கபீல் மருமகன் காசீம் மீது தாக்குதல் நடத்திய வாலிபர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டம், வாணியம்பாடி தொகுதி எம்.எல்.ஏவும், தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும் இருப்பர் நிலோபர்கபில். இவரது மருமகன் காசீம். இவர் ஏப்ரல் 6ந்தேதி இரவு 7 மணியளவில் தனது நண்பர்கள் இருவருடன் ஏலகிரி மலையில் இருந்து காரில் கீழே இறங்கி வந்துள்ளார். அப்போது இரண்டு இருசக்கர வாகனத்தில் மூன்று வாலிபர்கள் கீழே இறங்கி வந்துள்ளனர். அப்போது வாலிபர்களின் வாகனம் காசீமின் வாகனத்தின் மீது உரசியதாக கூறப் படுகிறது. இதனால் இரு தரப்பாருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி பிரகு கைகலப்பு ஆகியுள்ளது. இதில் காசீம் படுகாயம் அடைந்துள்ளார்.

அடிவாங்கிய அமைச்சரின் மருமகன், அவருடன் இருந்த இரண்டு பேர் வாணியம்பாடியில் உள்ள கட்சியினருக்கு தகவல் சொல்லி அவர்களை மடக்கச்சொல்லியுள்ளனர். வாணியம்பாடி நகருக்கு வெளியே தனியார் பொறியியல் கல்லூரி அருகே 3 இளைஞர்களை மடக்கிய அமைச்சரின் ஆட்கள் 20 பேர், அந்த இளைஞர்களை நன்றாக அடித்து உதைத்துள்ளனர். தகவல் நிலோபர் கபீலுக்கும் செல்ல அவரும் காவல்துறையிடம் பேசியுள்ளார். இந்நிலையில் வாலிபர்கள் மூவரும் தற்போது ஜோலார்பேட்டை காவல்நிலையத்தில் உட்கார வைக்கப்பட்டுள்ளனர். அந்த இளைஞர்கள் மீது ஏலகிரிமலை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்வதற்கான பணிகள் நடக்கின்றன. சம்மந்தப்பட்ட இளைஞர்கள் 17 வயதானவர்கள் என்பதால் அதற்கு தகுந்தார்போல் வழக்கு பதிவு செய்யும் முயற்சியில் காவல்துறை உள்ளது.

இதற்கிடையே அடி வாங்கிய காசீம் ஒரு முஸ்லிம் என்பதாலும் அடித்த வாலிபர்களும் முஸ்லிம்கள் என்பதாலும் சமாதான முயற்சியில் இருதரப்பாரும் இறங்கியிருப்பதாக தெரிகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!