விவசாயிகளை அதிர வைக்கும் விலை சரிவு!

ஏப்ரல் 07, 2018 713

திண்டுக்கல் (07 ஏப் 2018): மலைப்பூண்டு விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் விளைவிக்கப்படும் மலைப்பூண்டு, பெயர்பெற்றது. மருத்துவகுணமுள்ள இந்தப் பூண்டுக்கு சந்தையில் மிகுந்த வரவேற்பு நிலவும். கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், கவுஞ்சி, பூண்டி, கிளாவரை பகுதிகளில் பூண்டு விவசாயம் அதிக அளவில் நடைபெறுகிறது. கொடைக்கானல் சாலையோரங்களில் விற்கப்படும் இந்தப் பூண்டுகளை, சுற்றுலாப் பயணிகள் விரும்பி வாங்கிச்செல்வார்கள். கொடைக்கானலிலிருந்து வடுகபட்டி செல்லும் பூண்டு, அங்கிருந்து தமிழகம் மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறது.

இந்த ஆண்டு, மலைப்பூண்டு நல்ல விளைச்சல் கண்டுள்ளது. தற்போது அறுவடைப் பணிகள் தொடங்கியுள்ளன. அதே நேரத்தில், அதிக விளைச்சல் காரணமாக விலை வீழ்ச்சியடைந்துள்ளதால், விவசாயிகள் வேதனையடைந்திருக்கிறார்கள்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...