மோடி தமிழகம் வரும்போது கருப்பு கொடி காட்டுவோம்: ஸ்டாலின்!

ஏப்ரல் 08, 2018 422

சென்னை (08 ஏப் 2018): பிரதமர் மோடி தமிழகம் வரும்போது கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிப்போம் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை அருகே அமைந்துள்ள மாமல்லபுரத்தில் உள்ள திருவிடந்தையில் ராணுவ கண்காட்சி துவங்க உள்ளது. இந்தக் கண்காட்சி 11ம் தேதி துவங்கி 14ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்.

இந்நிலையில் ஏப்ரல் 12-ஆம் தேதி தமிழகத்துக்கு வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கருப்பு கொடி காட்டுவோம் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

காவிரி உரிமை மீட்பு பயணத்தை நேற்று ஸ்டாலின் தொடங்கினார். இன்று இரண்டாவது நாளாக தஞ்சை மாவட்டம் சூரக்கோட்டையிலிருந்து புறப்பட்டார் ஸ்டாலின். அப்போது ஸ்டாலின் இதனை தெரிவித்தார். மேலும் காவிரி பிரச்னைக்காக ஆயுள் முழுவதும் சிறையில் இருக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்; எங்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கை கண்டு அஞ்சவில்லை. என்றார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...