சென்னை கோவில் அர்ச்சகர் மனைவி கொலை வழக்கில் திடீர் திருப்பம்!

ஏப்ரல் 09, 2018 1118

சென்னை (09 ஏப் 2018): சென்னை கோவில் அர்ச்சகர் மனைவி கொலை செய்யப் பட்ட வழக்கின் திடீர் திருப்பமாக அவருடைய கணவர் பாலகணேஷ் கைது செய்யப் பட்டுள்ளார்.

சென்னை வடபழனி சிவன் கோயிலின் அர்ச்சகராக பணிபுரிந்து வருபவர் பாலகணேஷ் (எ) பிரபு. இவரது மனைவி ஞானபிரியா. இருவரும் வடபழனி சிவன்கோவில் தெருவில் வாடகை வீட்டில் குடியிருந்தனர். இந்நிலையில் கடந்த 5-ஆம் தேதி காலை வீட்டின் உரிமையாளர் விஜயலஷ்மி, குருக்கள் பாலகணேஷ் வீட்டின் கதவை தட்டியுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அவர் வடபழனி காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளார்.

புகாரின்பேரில் சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அங்கு ஞானப்பிரியா தலையில் பலத்த காயத்துடன் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். பாலகணேஷும் வீட்டின் கழிவறையில் கை, கால்கள் கட்டப்பட்டு கழுத்தறுக்கப்பட்ட நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

பின்னர் பாலகணேஷை ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஞானபிரியா உடலை மீட்டு ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைகாக அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கணவர் பாலகணேஷின் மீது போலீஸுக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும் பாலகணேஷிடம் நடத்திய விசாரணையில் ஞானப்பிரியாவை கொலை செய்ததை பாலகணேஷ் ஒப்புக் கொண்டார். குழந்தை இல்லாததை காரணம் காட்டி அவமானப்படுத்தியதால் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் மனைவியை நண்பர் மனோஜுடன் சேர்ந்து கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார். இதனை அடுத்து பால கணேஷையும், கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர் மனோஜையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...