மத்திய அரசுக்கு எதிராக முதல்வர் உண்ணா விரதம்!

ஏப்ரல் 09, 2018 431

புதுச்சேரி (09 ஏப் 2018): காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்ட உண்ணா விரதம் மேற்கொள்ளப் பட்டது.

மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் தலைமையில் நடைபெறும் இந்த போராட்டத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நீர் ஒழுங்காற்று குழு அமைக்காத மத்திய பாஜக அரசை கண்டித்தும், தலித் மக்களின் பாதுகாப்பு அரணாக இருந்த, வன்கொடுமை தடுப்பு சட்டத்திட்டத்தை நீர்த்துப்போகும் வகையில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை ரத்து செய்யக் கோரியும் வலியுறுத்தப்பட்டது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...