காவிரி விவகாரத்தில் ஸ்கீம் பற்றி விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஏப்ரல் 09, 2018 586

புதுடெல்லி (09 ஏப் 2018): காவிரி நீர் விவகாரம் தொடர்பான வழக்கில் ஸ்கீம் பற்றி விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.

தமிழகத்துக்கு கர்நாடகாவிலிருந்து 177.25 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும், ஆறு வாரத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதுவே, காவிரி விவகாரம் தொடர்பான இறுதித்தீர்ப்பு எனவும் இதை எதிர்த்து யாரும் மேல் முறையீடு செய்ய இயலாது என்றும் தெரிவித்திருந்தது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு கர்நாடகாவில் பலத்த எதிர்ப்புக் கிளம்பியது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் அறிவித்திருந்த 6 வாரம் கால அவகாசம் நிறைவடைந்தும் மத்திய அரசு மேலாண்மை வாரியம் அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

மேலும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காத மத்திய அரசின்மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது, அதே சமயம் உச்ச நீதிமன்றம் வழங்கியிருந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்த ‘ஸ்கீம்’ என்ற வார்த்தையின் விளக்கம் கேட்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடுதல் அவகாசம் கேட்டும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது. இந்த இரு வழக்கின் விசாரணையும் இன்று நடைபெற்றது. அப்போது ‘ஸ்கீம்’பற்றி தற்போது எதுவும் கூற முடியாது. ஒவ்வொரு நேரத்திலும் நதிநீர் பங்கீடு தொடர்பான விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்து விட்டது மேலும், தாக்கல் செய்ய மத்திய இந்த வழக்கை மே மாதம் 3-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...