காவிரிக்காக தென் கொரியாவிலும் போராட்டம்!

April 09, 2018

தென் கொரியா (09 ஏப் 2018): காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தென் கொரியாவிலும் போராட்டம் நடைபெற்றது.

காவிரி மேலாண்மை வாரியம அமைக்காமல் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்து வரும் நிலையில் போராட்டம் தமிழகம் மட்டும் அல்லாமல் உலகம் எங்கு பரவியுள்ளது. இந்நிலையில் தென் கொரியாவின் வடக்கே சோல் முதல் தெற்கே புசான் வரை, சோல், சுஒன், தேஜான், தேகு, பூசான் , சுன்ச்சோன், கொஜே தீவு, சொஞ்சூ, சொனான் மற்றும் உல்சான் ஆகிய இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. அதில் பதாகைகள் ஏந்தியும், உறுதிமொழி ஏற்றும் தீர்மானங்களை வாசித்தும் தங்கள் ஆதரவை காட்டினர் தென் கொரியாவில் வசிக்கும் தமிழ் மக்கள்.

இந்த போராட்டத்தில் "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவதை பெருமதிப்பிற்குரிய உச்ச நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும். தமிழ் நாட்டின் உணவு உற்பத்தி நடைபெறும் மிகமுக்கிய இடமான தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டா பகுதியில் ஐட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை நடுவண் அரசு உடனே திரும்பப்பெற வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை உடனடியாக மூடப்பட வேண்டும். தமிழகத்தின் தேனியின் அருகே பொட்டியாபுரம் மலையைக் குடைந்து அமைக்கப்படும் நியூட்ரினோ திட்டம் குறித்து மக்களுக்கு எழுந்திருக்கும் ஐயம் முறையாக தீர்க்கப்படும்வரை அந்த திட்டத்தை முன்னெடுத்து செல்வதை அரசு நிறுத்தி தீவிர மறுசிந்தனை செய்ய வேண்டும்" உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!