யாரை வேண்டுமானாலும் அனுப்புங்கள்: தமிழிசைக்கு சத்யராஜ் பதில்!

ஏப்ரல் 10, 2018 663

சென்னை (10 ஏப் 2018): ஐ.டி.ரெய்டுக்கு அதிகாரிகளை அனுப்பினால் நான் பயப்படப் போவதில்லை என்று நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நேற்று காலை 9 முதல் பிற்பகல் 1 மணி வரை அறவழிப் போராட்டம் நடந்தது. போராட்டத்தின் முடிவில் நடிகர் சத்யராஜ் பேசினார். அப்போது ``காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும், ராணுவமே வந்தாலும் அஞ்ச மாட்டோம், குரல்கொடுக்கத் தைரியம் உள்ளவர்கள் தமிழர்களின் பின்னால் நில்லுங்கள்; இல்லையேல், ஒளிந்துகொள்ளுங்கள்" என்று ஆவேசமாக முழக்கமிட்டார்.

இதுகுறித்து சென்னை வேளச்சேரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பா.ஜ.க தலைவர் தமிழிசை, "ராணுவமே வந்தாலும் அஞ்ச மாட்டோம் என நடிகர் சத்யராஜ் பேசுகிறார். ஐ.டி ரெய்டு வந்தால் அவர்கள் பயப்படுவது தெரியும்." என்றார். இது பொதுவெளியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து சென்னையில் ஐ.பி.எல் போட்டிகளுக்குச் செல்லக் கூடாது என வலியுறுத்தி இன்று இயக்குநர்கள் பாரதிராஜா, சேகர், அமீர், செல்வமணி, சத்யராஜ் ஆகியோர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய சத்யராஜ், "உண்மையான களப்போராளிகளுக்குப் பின்னால் இருக்கவே ஆசைப்படுகிறேன். நான் எல்லா விளையாட்டுக்கும் ஆதரவானவன்தான். ஆனால், காவிரிக்காக போராட்டம் நடந்துவரும்போது ஐ.பி.எல் வந்தால் சரியிருக்காது. எந்த ஐ.டி ரெய்டுக்கும் நான் அஞ்சமாட்டேன்" என்று நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...