கன்னடர்களை அசர வைத்த சிம்பு!

ஏப்ரல் 11, 2018 838

சென்னை (12 ஏப் 2018): நடிகர் சிம்பு பதிந்த ஒரு ட்விட்டர் பதிவு கன்னடர்களையே அசர வைத்துள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இதுதொடர்பாக பத்திரிகையாளர்களைச் சந்தித்த சிம்பு, இன்று (11-4-2018) மதியம் `கர்நாடகாவில் இருக்கும் மக்கள் அங்கிருக்கும் ஒரு தமிழருக்கு ஒரு டம்ளர் தண்ணீர் கொடுத்தால், அவர்களுடைய ஆதரவு எங்களுக்கு இருப்பதாக நாங்கள் புரிந்துகொள்கிறோம்' எனத் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து டிவிட்டரில் #UniteForHumanity (மனிதாபிமானத்துக்காக ஒன்றுசேர்) என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி, அதில் இதுதொடர்பான பதிவுகளைப் பதிவிடும்படி கேட்டுக்கொண்டார். அந்த ஹேஷ்டேக்கின் நிலை என்ன?

The Jewish Carpenter' என்ற பெயரில் ட்விட்டர் கணக்கை வைத்திருக்கும் ஒருவர், தனது கருத்துகளை வீடியோவாகப் பதிவிட்டிருக்கிறார். அதில், `சிம்புவின் பேச்சு மிகவும் மெச்சூராக இருந்தது. நான் நிறைய அரசியல்வாதிகளைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் அனைவரும் அரசியல் ஆதாயங்களுக்காக மட்டுமே செயல்படுவார்கள். ஆனால், நடிகர் சிம்பு பேசியதில் நிதர்சனமும் உண்மையும் இருந்தது. கன்னடர்களான நாங்கள், தமிழ் சகோதரர்கள் யாரையும் அவ்வளவு எளிதில் கைவிட்டுவிட மாட்டோம்.' என்று குறிப்பிட்டிருந்தார். அந்த வீடியோவை சில தமிழ் செலிபிரிட்டிகளும், பல தமிழர்களும் ரீ-ட்வீட் செய்துள்ளனர். அதேபோல Pradeep (Blue tick) என்ற ட்விட்டர் யூஸர் அவருடைய கர்நாடக நண்பருடன் இணைந்து தண்ணீர் பகிர்ந்து குடித்தபடி சில போட்டோக்களைப் பதிவேற்றியிருக்கிறார். அதைவைத்துப் பல மீம்களும் போஸ்ட்களும் ட்விட்டரில் குவிந்து வருகின்றன. பலரும் சிம்புவை ஆதரித்துப் பல கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, கர்நாடகாவைச் சேர்ந்த மக்களும் தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகின்றனர்.

கர்நாடகாவில் அவர்களுடைய நண்பர்கள், கல்லூரி நண்பர்கள், அலுவலக நண்பர்கள் என அக்கம் பக்கத்தில் இருக்கும் அவர்களது தமிழக நண்பர்கள் அனைவருக்கும் ஒரு கிளாஸ் தண்ணீர் கொடுத்து தமிழக மக்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகின்றனர். சிம்பு பேசிய வீடியோ, கர்நாடகாவில் இருக்கும் லோக்கல் நியூஸ் சேனல்களிலும் ஒளிபரப்பு செய்யப்பட்டது. சமூக வலைதளங்களில் ஒலிக்கும் குரல் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதை உணர்ந்த சிம்பு, ஹேஷ்டேக்கை உருவாக்கி மதியம் 3 மணியில் இருந்து, மாலை 6 மணி வரை சிறு வீடியோவாக உருவாக்கி, அதில் அவர்களது ஆதரவை தெரிவிக்கச் சொன்னார். சொன்னதுபோலவே ட்விட்டரில் அந்த ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி ஏராளமானோர் பதிவிட்டு வருகின்றனர். இன்னும் பலர் சிம்பு சொன்னதுபோல கர்நாடக மக்கள் அங்கிருக்கும் தமிழ் நண்பர்களுக்கு கிளாஸில் தண்ணீர் கொடுத்துக்கொண்டு வருகிறார்கள்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...