கறுப்பு பலூன் பறக்க பிரதமர் மோடி சென்னை வந்தார்!

April 12, 2018

சென்னை (13 ஏப் 2018): பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே பிரதமர் மோடி சென்னை வந்திறங்கினார்.

ராணுவ தளவாட நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, திருவிடந்தை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மோடி, விமான நிலையத்தில் வந்திறங்கிய சமயத்தில், அந்தப் பகுதியைச் சுற்றி கறுப்பு பலூன்கள் பறக்கவிடப்பட்டன. அவருக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை பரங்கிமலைப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கறுப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பாரதிராஜா, வெற்றிமாறன், அமீர் உள்ளிட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்தனர்.

மோடி வருகையை ஒட்டி சென்னை முழுவதும் சுமார் 7 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Search!