எதிர்ப்பைக் கண்டு அதிர்ந்த மோடி - உலகம் திரும்பி பார்த்த தமிழகம்!

ஏப்ரல் 12, 2018 961

சென்னை (12 ஏப் 2018): பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு ஒட்டு மொத்த தமிழக மக்களும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து, தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. சாலை மறியல், ரயில் மறியல் என, பல்வேறு கட்சிகள், அமைப்புகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், சென்னை அடுத்துள்ள திருவிடந்தையில் ராணுவக் கண்காட்சி தொடக்க விழா, அடையாறு புற்றுநோய் மருத்துவமனை வைர விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து. மோடிக்கு எதிராக கருப்புக் கொடி காட்டி ஒட்டு மொத்த தமிழக மக்களும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

பொதுவாக மோடி எங்கு சென்றாலும் ஊடகங்கள் அவரையே ஃபோக்கஸ் செய்யும் ஆனால் இம்முறை மோடியின் தமிழக வருகை ஊடகங்களால் ஃபோக்கஸ் செய்யப் பட முடியவில்லை மாறாக கறுப்புக் கொடி போராட்டம் மற்றும் இன்ன பிற மோடி எதிர்ப்பு போராட்டமே விஸ்வரூபம் எடுத்துக் காணப்படுகிறது. டிவிட்டரிலும் மோடி எதிர்ப்பே உலக டிரெண்ட் ஆகியுள்ளது. இதனா பிரதமர் மோடி அதிர்ச்சி அடைந்துள்ளார். இணையத்திலும் #GoBackModi என்ற ஹேஷ் டேக் ட்ரெண்டாகி வருகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...