காவிரி விவகாரம் தொடர்பாக பாடல் பாடிய கோவன் கைது!

April 13, 2018

திருச்சி (13 ஏப் 2018): காவிரி விவகாரம் தொடர்பாக பாடல் பாடிய கோவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மக்கள் கலை இலக்கிய கழகத்தைச் சேர்ந்த பாடகர் கோவன். இவர் மக்கள் பிரச்னைகளை முன்வைத்து ம.க.இ.க மேடைகளில் பாடல்களைப் பாடி வருபவர். சாதியக் கொடுமைகள், போலீஸ் அடக்குமுறைகள், தனியார் பள்ளிகளில் கட்டணக் கொள்ளை, மணல் கொள்ளை, கனிமவளக் கொள்ளை உட்பட பல சமூகப் பிரச்னைகள் குறித்த விழிப்பு உணர்வுப் பாடல்களை உணர்ச்சிகரமாகப் பாடிவருபவர் இவர்.

இந்நிலையில் ரதயாத்திரைக்கு எதிராகவும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் கோவன் சமீபத்தில் பாடல்களைப் பாடினார். இதற்காக கோவனை திருச்சி போலீஸார் கைது செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த 2015-ம் ஆண்டு மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது `மூடு டாஸ்மாக்கை மூடு’ என்று பாடியதற்காகக் கோவன் தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார் .

கடந்த மார்ச் 28ம் தேதி பா.ஜ.க மாநகர் மாவட்ட இளைஞரணி பிரிவுத் தலைவர் கெளதமன் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கோவனுக்கு எதிராக புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!