இப்போதைக்கு வேண்டாம் - பின் வாங்கிய ரஜினி!

ஏப்ரல் 14, 2018 1127

சென்னை (14 ஏப் 2018): நிலைமை சரியில்லை என்றும் இப்போதைக்கு அரசியலுக்கு வரப்போவதில்லை என்று நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.

ஆன்மீக அரசியலை முன்னெடுப்பதாக அறிவித்த ரஜினி காவிரி நீர், ஸ்டெர்லைட், மீத்தேன், திருச்சி உஷா மரணம் உள்ளிட்ட மக்கள் பிரச்சனைகளில் பெரும் அமைதி காத்தார். அதனால், அவர் எதற்கும் கருத்து தெரிவிக்காமல் இருக்கிறார் என்கிற குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், தான் இன்னும் முழுநேர அரசியல்வாதி ஆகவில்லை என ரஜினி பதில் கூறி வந்தார்.

அந்நிலையில்தான், காவிரி நீர் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, சென்னையில் ஐ.பி.எல் போட்டியை நடத்தக்கூடாது என பாரதிராஜா தலைமையிலான அமைப்பினர் சென்னை அண்ணாசாலை அருகேயுள்ள வாலஜா சாலையில் போராட்டம் நடத்தினர். அப்போது, அவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். அந்த களோபரத்தில் போலீசாரும் தாக்கப் பட்டனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த ரஜினி போலீசார் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்த ரஜினி, பிற விசயங்களில் அமைதி காத்தார். இதனால் தமிழக மக்கள் ரஜினி மீது கடும் அதிருப்தி அடைந்தனர். மேலும் ரஜினி பாஜகவுக்கு மறைமுக ஆதரவு தெரிவிக்கிறார் என்ற கருத்தும் நிலவுகிறது.

இந்நிலையில் தற்போது தனக்கு சாதகமான சூழ்நிலை இல்லாததால், தற்போதைக்கு அரசியல் அறிவிப்பை தள்ளி வைப்போம் என ரஜினி முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...