கோவையில் ஆசிஃபாவிற்கு ஆதரவாக பேசிய மாணவி நீக்கம்!

ஏப்ரல் 14, 2018 717

கோவை (14 ஏப் 2018): காஷ்மீரில் வன்புணரப்பட்டு கொலை செய்யப் பட்ட ஆசிஃபா என்ற சிறுமிக்கு ஆதரவாக பேசிய கோவை சட்டக் கல்லூரி மாணவி இடை நீக்கம் செய்யப் பட்டுள்ளார்.

ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டம் ராஸானா வனப்பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 8 வயது சிறுமி கொலை செய்யப்பட்டு கிடந்தார். விசாரணையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

இது தொடர்பாக கோவில் குருக்கள், போலீஸ் அதிகாரி மற்றும் 9 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். இதில் ஒருவர் காஷ்மீரில் பா.ஜ.க பிரமுகரின் மகன். மற்றும் காவல்துறை உயரதிகாரியின் மகன், கல்லூரி மாணவன் என தெரியவந்தது. இந்த சம்பவம் காஷ்மீரில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்திற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆசிபாவிற்கு ஆதரவாக கோவை சட்டக் கல்லூரியில், முதலாம் ஆண்டு படித்துவரும் மாணவி ப்ரியா கல்லூரி வகுப்பின்போது பேசியுள்ளார். அதில், ஆணாதிக்கம் நிறைந்த சமூகத்தில் பெண்கள் எப்பொழுதும் காமப்பொருளாக தான் பார்க்கப்படுகிறார்கள். இதற்கு பெண்களின் உடை தான் காரணம் என கூறுகிறார்கள். 8 வயது குழந்தை என்ன மாதிரி உடை அணியும்? எனவே, இதற்கு உடை காரணம் இல்லை. ஆணாதிக்க மனோபாவம்தான் காரணம் என பேசியுள்ளார்.

இதற்காக கல்லூரியில் அம்மு என்ற பேராரசிரியர் சில மாணவிகளுடன் இணைந்து கொடுத்த புகாரின் அடிப்படையில், கல்லூரி முதல்வர் பிரியாவை சஸ்பெண்ட் செய்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...