காவிரிக்காக தீ குளித்த வை.கோவின் உறவினர் மரணம்!

ஏப்ரல் 14, 2018 533

விருதுநகர் (14 ஏப் 2018): தீ குளித்த வை கோவின் மச்சான் மகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அரசியலில் வைகோவுடன் இணைந்து செயல் பட்டவர் சரவணன் சுரேஷ். இந்நிலையில் நேற்று விருது நகர் விளையாட்டு மைதானத்தில் காவிரி விவகாரம், ஸ்டெர்லை, நீட் தேர்வு ஆகியவற்றிற்கு எதிராக திடீரென தீ குளித்தார் சரவணன் சுரேஷ். மதுரை அப்பல்லோவில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப் பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி மருத்துவ மனையில் உயிரிழந்தார்.

ஏற்கனவே மதிமுக தொண்டர் ஒருவர் தீ குளித்து உயிரிழந்த நிலையில் வைகோவின் மச்சான் மகனும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...