மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த பேராசிரியை!

ஏப்ரல் 15, 2018 1279

விருதுநகர் (15 ஏப் 2018): அருப்புக்கோட்டையில் பேராசிரியை ஒருவர் மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இது மதுரை காமராஜர் பல்கலை கழகத்தின் கீழ் இயங்கி வருகிறது. இங்கு கணித்துறை பேராசிரியராக பணியாற்றி வருபவர் நிர்மலா. இவர் பல்கலைக் கழகத்தில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு மாணவிகளை படுக்கைக்கு உதவினால் பணமும், 85 சதவீத மதிப்பெண்ணும் வழங்குவதாக அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

இதனை அடுத்து ஏழ்மையில் உள்ள சில மாணவிகளை அவர் அதிகாரிகளுடன் ஒத்துழைக்க கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் அதற்கு மறுத்த மாணவிகள் நிர்மலா அவர்களுடன் பேசிய தொலைபேசி ஆடியோவை கல்லூரி நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். இதனை அடுத்து பேராசிரியை நிர்மலா பணி இடை நீக்கம் செய்யப் பட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...