யார் அந்த ஹையர் அஃபீசியல்ஸ்?

ஏப்ரல் 15, 2018 3666

விருதுநகர் (15 ஏப் 2018): கல்லூரி மாணவிகளை பாலியல் ரீதியாக தொல்லை கொடுக்கும் ஹையர் அஃபீசியல்ஸ் அதிகாரிகளை கண்டு பிடித்து அவர்கள் தண்டிக்கப் பட வேண்டும் என்ற கோரிக்கை பொது மக்களிடையே எழுந்துள்ளது.

அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இது மதுரை காமராஜர் பல்கலை கழகத்தின் கீழ் இயங்கி வருகிறது. இங்கு கணித்துறை பேராசிரியராக பணியாற்றி வருபவர் நிர்மலா. இவர் பல்கலைக் கழகத்தில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு மாணவிகளை படுக்கைக்கு உதவினால் மாணவிகளின் மதிப்பெண் விவகாரத்திலும், பொருளாதார ரீதியியிலும் உதவுவதாக இணையத்தில் ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக பேராசிரியை நிர்மலா குறிப்பிட்ட நான்கு மாணவிகளிடம் சாதுர்யமாக பேசி அவர்களை பிரைன் வாஷ் செய்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் முயற்சியில் ஈடுபடுத்த முயற்சிப்பதும். அதற்காக அவர்களின் கல்லூரி பாட மதிப்பெண்கள் மட்டுமல்லாது எதிர் காலத்திலும் பல வகைகளில் உதவி புரிய வாய்ப்பு உள்ளது என்று பேராசிரியை நிர்மலா பேசும் ஆடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆனால் குறிப்பிட்ட மாணவிகள் பேராசிரியையின் மகுடி பேச்சுக்கு மயங்காமல் துணிச்சலாக அந்த ஆடியோவை கல்லூரி நிர்வாகத்திடம் ஒப்படைத்ததோடு, உலகத்தில் உள்ள அனைவரும் அந்த ஆடியோவை கேட்டு பேராசிரியை நிர்மலா குறித்து அனைவரும் அறிய வேண்டும் என இணையத்தில் உலாவ விட்டுள்ளனர்.

அந்த ஆடியோவில் பேராசிரியை பேசும்போது இது ரொம்பவே ரகசியம் என்றும் ஹையர் அஃபீசியல் சம்மந்தப் பட்டது என்றும் வெளியில் தெரிந்தால் மிகவும் மோசமாகிவிடும் என்றும் கூறுகிறார். இந்நிலையில் நிர்மலா என்ற அம்பு இருக்கட்டும். அந்த் அம்பை எய்த ஹையர் அஃபீசியல்ஸ் யார் என்பதை கண்டு பிடித்து தண்டிக்க வேண்டும் என்றும் இதன் பின்னணியில் வேறு யாரும் உள்ளனரா? என்பதையும் கண்டு பிடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...