நான் அந்த நிர்மலா தேவி அல்ல - ஜெஸ்ஸி முரளிதரன்!

ஏப்ரல் 17, 2018 2121

சென்னை (17 ஏப் 2018): மாணவிகளை பாலியல் ரீதியாக இணங்க வைக்கும் வகையில் அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி பேசிய ஆடியோ ஒன்று வெளியான நிலையில் அவரைப் போன்ற முக சாயல் கொண்ட வேறொரு புகைப் படத்தை சமூக வலை தளங்களில் பரப்பி வருவதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது.

அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலைக் கல்லூரியில் கணிதத் துறையில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றிவரும் நிர்மலா என்பவர் அந்த கணிதத் துறையில் இளநிலை படிக்கும் 4 மாணவிகளிடம் பேசுவது போன்று வெளியான ஒலிநாடாவில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், பல்வேறு வசதிகளை செய்துதர வேண்டிய உயர்பதவியில் இருப்பவர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டியிருப்பதாகவும், அதற்காக அந்தக் கல்லூரி மாணவிகளை சில விஷயங்களுக்காக எதிர்பார்ப்பதாகவும் கூறுவது பதிவாகியிருந்தது.

இந்த விஷயங்களை சம்பந்தப்பட்ட மாணவிகள் ஒப்புக் கொண்டால் அவர்களுக்கு தேர்வில் அதிக மதிப்பெண் வழங்கப்படும்; பட்ட மேற்படிப்பில் எளிதாக இடம் வாங்கித் தருவதுடன், மாதந்தோறும் நினைத்துப் பார்க்க முடியாத தொகை அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி அந்த ஒலிநாடாவில் பேசியிருந்தார். ஆனால் நிர்மலா தேவியின் பேச்சுக்கு மாணவிகள் இணங்க மறுத்தனர்.

இந்நிலையில் அந்த பேராசிரியை நிர்மலா தேவி பாஜகவை சேர்ந்தவர் என்று ஒரு சிலர் சமூக வலை தளங்களில் பரப்பி வருகின்றனர். மேலும் அதில் ஒரு சில பெண்கள் இருப்பதாக புகைப்படம் ஒன்றும் உள்ளது. ஆனால் அது ஜெஸ்ஸி முரளிதரன் என்பவருடைய புகைப்படம் என்று தெரிய வந்துள்ளது. முகநூல் பக்கத்தில் ஜெஸ்ஸி முரளிதரன் நான் அவர் அல்ல என்று பதிவிட்டுள்ளார். மேலும் பெண்கள் எங்கள் கண்கள் அது உங்களுக்கு புரியாது என்றும் அவர் பதிவிட்டுள்ளார். மேலும் மீம்ஸ் போடுங்கள் ஆனால் நான் அவளல்ல என்றும் Jessy Muralidharan அவரது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...