கல்லூரி ஆசிரியை பாலியல் விவகாரத்தில் ஏதோ உள்ளது - ஸ்டாலின்!

ஏப்ரல் 17, 2018 615

சென்னை (17 ஏப் 2018): அருப்புக் கோட்டை கல்லூரி பேராசிரியை மாணவிகளை பாலியல் ரீதியாக இணங்க சொன்ன விவகாரத்தில் ஏதோ உள் விவகாரம் உள்ளது இதனை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், "ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்தான் அந்தப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை தீர்க்கும் தலைவராக விளங்குபவர். எனவே, மாணவிகளுக்கு பாலியல் வற்புறுத்தல் அளிக்கப்பட்ட புகாரில் மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர தான் முறையான நடவடிக்கை எடுக்க முயற்சித்து இருக்க வேண்டும்.

ஆனால், பல்கலைக்கழகத்தின் வேந்தராக இருக்கும் ஆளுநர் எப்படி இதற்கான முயற்சியில் ஈடுபட்டார் என்பது புரியவில்லை. இதில் ஏதோ குழப்பம் இருப்பதாகவே தெரிகிறது. எனவேதான், உயர்நீதிமன்றத்தின் மேற்பார்வையில் சிபிஐ அமைப்பு இதுகுறித்து விசாரணை நடத்தினால்தான் உண்மைகள் வெளியாகும் என்று வலியுறுத்தியிருக்கிறேன்” என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...