பேராசிரியை நிர்மலா விவகாரம் குறித்து ஆளுநர் விளக்கம்!

ஏப்ரல் 17, 2018 537

சென்னை (17 ஏப் 2018): பேராசிரியை நிர்மலா தேவி ஆடியோ விவகாரத்தில் ஆளுநர் திடீர் விசாரணை குழு அமைத்த விவகாரம் சர்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்று ஆளுநர் பன்வாரிலால் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் தெரிவித்ததாவது;

"தமிழக ஆளுநராக 6 மாதங்கள் பணியாற்றியுள்ளேன். தற்போது காமராஜர் யுனிவர்சிட்டி பேராசிரியை ஆடியோ விவகாரம் பெரிதாக பேசப்படுகிறது. இதுகுறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகம் என்னோடு கலந்து ஆலோசிக்காமல் விசாரணை கமிட்டி அமைத்துள்ளது. இவ்விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை. தேவைப்பட்டால் அமைக்கப்படும். பல்கலை கழக நிகழ்ச்சியின்போது சிலர் அங்கேயும் இங்கேயும் வருவதுண்டு. அதை வைத்து சம்மந்தம் படுத்தக்கூடாது. அந்த பெண்மணி என்னை தாத்தா போன்றவர் என்றுதான் கூறியுள்ளார். எனக்கு பேரன், கொள்ளுக்பேரன், பேத்திகள் உள்ளனர்." என்றார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...