ரஜினிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ள பிரபல நடிகர்!

ஏப்ரல் 19, 2018 935

சென்னை (19 ஏப் 2018): நடிகர் ரஜினிக்கு ஆதரவாக நடிகர் ஆனந்தராஜ் குரல் கொடுத்துள்ளார்.

சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் இன்று நடிகர் ரஜினிகாந்தை நடிகர் ஆனந்தராஜ் சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆனந்தராஜ், "திடீரென திரையுலகத்தினர் சிலர் ரஜினியை குறி வைத்து தாக்குவது ஏன் என்று தெரியவில்லை என்றார்.

மேலும் ரஜினியை கர்நாடகக் காரர் என்று கூறும் பாரதிராஜ கொடி பறக்குது என்று ரஜினியை வைத்து ஏன் படம் எடுத்தார்? என்றும் கேள்வி எழுப்பினார். மேலும் அரசியலில் இருந்து ரஜினியை பிரித்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. மாற்றம் வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள் இருக்கிறார்கள். அவர் கட்சி தொடங்க வேண்டும் அதன் பின்னர் இணைந்து செயல்படுவது பற்றி கூறுகிறேன். ரஜினிகாந்த் நிறைய கருத்துக்களை கூறி உள்ளார். திரை துறை சார்ந்த விசயத்திற்கு சங்கம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம். ரஜினி தமிழ் மக்கள் மீது மிகுந்த அன்பு வைத்துள்ளார். என்றார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...