இதற்குத்தான் ஆசைப் பட்டீரா ஹெச்.ராஜா?

ஏப்ரல் 19, 2018 999

சென்னை (19 ஏப் 2018): திமுக எம்.பி கனிமொழியை கொச்சையாக விமர்சித்த ஹெச்.ராஜாவுக்கு பலதரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் மைலாப்பூர் மேம்பாலத்தில் ராஜா உருவ பொம்மை கட்டி அதில் படு மோசமான வார்த்தைகள் எழுதப் பட்டு தொங்கவிடப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்ததும் அங்கே சென்ற போலீசார், ராஜா உருவ பொம்மையை அகற்றினர்.

இதற்கிடையே கர்நாடக தேர்தலில் ஹெச்.ராஜா பிசியாக உள்ளாராம். இதனை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சாரணர் இயக்க தேர்தலில் கூட வெல்ல முடியாத நிலையில், கர்நாடகாவில் ராஜா பிரச்சாரம் செய்தா பாஜக வெற்றி பெறப்போகிறது என்று கேலி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் திமுக சார்பில் இன்று மாலை அவர் உருவப் படத்திற்கு எச்சில் துப்பும் போராட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தகக்து.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...